இந்து சமய அறநிலையத்துறையில் வேலை.. 10 ஆம் வகுப்பு முடித்திருந்தால் போதும்.. 58,600 வரை சம்பளம்
இந்து சமய அறநிலையத்துறையின்
கீழ் கட்டுப்பாட்டில் உள்ள கோவிலில் சீட்டு விற்பனையாளர் பணியிடங்களை நிரப்ப
அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்கு 10-ம்
வகுப்பு முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம். மாதம் ரூ. 58,600 வரை சம்பளம் வழங்கப்படும்.
நாமக்கல்லில் உள்ள அருள் மிகு நரசிம்ம
சுவாமி திருக்கோயிலில் காலியாக
உள்ள சீட்டு விற்பனையாளர் பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகியுள்ளது. இந்த பணியிடங்களுக்கான
கல்வி தகுதி என்ன?
வயது வரம்பு உள்ளிட்ட முழு
விவரங்களை இங்கே பார்க்கலாம்.
கல்வி தகுதி:
நரசிம்மசுவாமி திருக்கோயில் சீட்டு (டிக்கெட்) விற்பனையாளர்
பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் குறைந்தபட்சம் 10 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். அல்லது அரசால் அங்கீகரிக்கப்பட்ட
அதற்கு இணையான கல்வி தகுதி இருக்க வேண்டும். மொத்தம் காலியாக உள்ள 2 டிக்கெட் விற்பனையாளர் இடங்கள் நிரப்பப்படுகின்றன.
சம்பளம்
எவ்வளவு?:
ரூ.18,500 முதல் 58,600 வரை வழங்கப்படும். விண்ணப்பிப்பதற்கு கட்டணம் எதுவும்
கிடையாது. விண்ணப்பதாரர்கள் இதர விவரங்களை கோயில் அலுவலகத்தில் கேட்டு தெரிந்து
கொள்ளலாம்.
வயது வரம்பு:
விண்ணப்பதாரர் இந்து மதத்தை சார்ந்தவராக இருக்க வேண்டும். 01.07.2023 ஆம் ஆண்டு 18 வயது நிரம்பியிருக்க வேண்டும். அதிகபட்ச
வயது 45 க்கு மிகாமல்
இருத்தல் வேண்டும்.
விண்ணப்பிப்பது எப்படி:
விண்ணபிக்க கடைசி நாள்:
நரசிம்மசுவாமி திருக்கோயில் சீட்டு (டிக்கெட்) விற்பனையாளர் பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் செப்டம்பர் மாதம் 12-ம் தேதிக்குள் விண்ணப்பங்கள் சென்று சேரும்படி அனுப்ப வேண்டும். விண்ணப்ப படிவங்களை நேரிலும் சென்று பெற்றுக்கொள்ளலாம்.
விண்ணப்பம் அனுப்ப வேண்டிய முகவரி:
உதவி ஆணையர்/ செயல் அலுவலர், அருள்மிகு நரசிம்ம சுவாமி திருக்கோயில், நாமக்கல் -637001. புகைப்படம், நன்னடத்தை சான்று, காவல்துறை சரிபார்ப்பு சான்று உள்ளிட்டவற்றை பெற்று அதையும் விண்ணப்ப படிவத்தோடு இணைத்து அனுப்ப வேண்டும்.
இ![]()
ந்த வேலை
வாய்ப்பிற்கான விண்ணப்ப படிவம் கீலே கொடுக்கப்பட்டுள்ளது
Official Notification Link : CLICK HERE
No comments:
Post a Comment