குடும்ப தலைவிக்கு 1000 ரூபாய் மாதம் விண்ணப்பம்
குடும்ப தலைவிக்கு 1000 ரூபாய் மாதம் விண்ணப்பம் யாருக்கு (kudumba thalaivi 1000 apply online eligibility list
tamil news ) - ஏழை குடும்பத் தலைவிகளுக்கு ஆயிரம் ரூபாய் உதவித்தொகை விண்ணப்பம் எங்கே கிடைக்கும் அல்லது எங்கே விண்ணப்பிப்பது என்பது போல் கேள்விகள் உங்கள் மனதில் எழும். இன்றைய தேதி வரையும் அதற்கான விண்ணப்பங்கள் எங்கும் கிடையாது மற்றும் விண்ணப்ப படிவங்களும் வராது. எதற்காக இந்த உதவித்தொகை என்றால் கஷ்டப்படும் மக்கள்,
வறுமை கோட்டிற்கு கீழ் உள்ள மக்கள் மற்றும் நடுத்தர மக்கள் என மூன்று விதமான மக்களை தேர்வு செய்து அவர்களுக்கு ரூபாய் 1000 வீதம் மாதந்தோறும் வழங்க அரசு ஏற்பாடு செய்து வருகிறது.
தமிழ்நாடு பட்ஜெட் 2023 மார்ச் மாதம் 20
தேதியன்று நடைபெற்றது. அதில் குடுத்து தலைவிகளுக்கு மாதம் ரூபாய் 1000 வழங்குவதை பற்றி பேசினார்கள். அந்த அறிக்கையில் செப்டம்பர் மாதம் 15
முதல் மாதம் ரூபாய் ரேஷன் அட்டை வைத்திருப்பவர்களுக்கு வழங்கப்படும் என்று குறிப்பிட்டு இருந்தார்கள். ஆனால் தகுதி வாய்ந்த அட்டைகளுக்கு மட்டுமே வழங்கப்படும் என்றும் கூறியுள்ளார்கள்.
குடும்பத் தலைவிக்கு ஆயிரம் ரூபாய்
இந்த உதவித்தொகை பெற எந்த வித விண்ணப்பமும் அல்லது எந்த வித கட்டணமும் இல்லாமல் மிகவும் எளிதாக பெறலாம். இதற்காக எங்கும் அலையை தேவை இல்லை என்பதே உண்மை. ஆனால் எல்லோருக்குமே இந்த அட்டைக்கான பணம் கிடைக்கும் என்பது உண்மை இல்லை. மாறாக PHH - AAY, PHH மற்றும் NPHH அட்டைகளுக்கு மட்டுமே 1000 ரூபாய் வழங்கப்படும் என்று அரசு ஏற்கனவே அறிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.
ஏழை குடும்ப தலைவிகளுக்கு ரூ 1000 உதவித்தொகை விண்ணப்பம்
மற்ற அட்டைகளில் இருந்து இந்த மூன்று வகையான அட்டைக்கு உடனடியாக மாறுவது,
ஒரே வீட்டில் இரண்டு அல்லது மூன்று அட்டைகளை வைத்திருப்பவர்களுக்கு மற்றும் இந்த குடும்ப தலைவிக்கு 1000 ரூபாய் செய்தி வந்த உடன் பழைய அட்டையில் இருந்து பெயர் நீக்கி புதிய அட்டையில் பெயர் சேர்த்திருப்பவர்கள் ஆகியோர்களுக்கு பணம் கிடைக்க சாத்திய கூறுகள் குறைவு என்று சொல்லாம்.
எப்போது இந்த 1000
ரூபாய் ஸ்மார்ட் கார்டுக்கு வழங்குவார்கள் என்றால் தமிழக அரசு சுற்றறிக்கை வரும் வரையில் பொறுத்திருந்து பார்க்க வேண்டும். அப்போது தான் எந்த வித செய்தியையும் நாம் அறிய முடியம்.
No comments:
Post a Comment