Pages

வேலை வாய்ப்பற்றோர் உதவித் தொகை பெற விண்ணப்பிக்கலாம்

 

வேலை வாய்ப்பற்றோர் உதவித் தொகை பெற விண்ணப்பிக்கலாம்

வேலை வாய்ப்பற்றோர் உதவித்தொகை பெற விண்ணப்பிக்கலாம் என திருப்பத்தூர் மாவட்ட கலெக்டர் பாஸ்கர பாண்டியன் தெரிவித்துள்ளார்.

உதவித்தொகை

படித்து வேலைவாய்ப்பு மற்றும் தொழில் நெறிவழிகாட்டும் மையத்தில் பதிவு செய்து எவ்வித வேலைவாய்ப்பும் கிடைக்காமல் 5 ஆண்டுகளுக்கும் மேலாக காத்திருக்கும் இளைஞர்களின் நலனுக்காக, மாதம் ஒன்றுக்கு 10-ஆம் வகுப்பு தேர்ச்சி பெறாதவர்களுக்கு ரூ.200, தேர்ச்சி பெற்றவர்களுக்கு ரூ.300, மேல்நிலை கல்வியில் தேர்ச்சிப் பெற்றவர்களுக்கு ரூ.400 மற்றும் இளநிலை பட்டதாரிகளுக்கு ரூ.600 வீதம் மூன்றாண்டு காலத்திற்கு வேலைவாய்ப்பற்றோர் உதவித் தொகை வழங்கப்படுகிறது

மாற்றுத்திறனாளிகளை பொருத்தமட்டில் பதிவு செய்து ஓராண்டு\

நிறைவு செய்துள்ள பதிவுதாரர்களுக்கு மாதம் ஒன்றுக்கு ரூ.600, 

ரூ.750, ரூ.1,000 வீதம் 10 ஆண்டு காலத்திற்கு உதவித் தொகை 

வழங்கப்படுகிறது.

 

விண்ணப்பம்

இத்திட்டத்தின் கீழ் உதவித்தொகை பெற வேலைவாய்ப்பகத்தில் பதிவு செய்து 5 ஆண்டுகள் முடிவு பெற்றுள்ள பொதுப்பிரிவினர், ஓராண்டு முடிவுபெற்றுள்ள மாற்றுத்திறனாளிகள் விண்ணப்பப் படிவங்களை திருப்பத்தூர் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் நேரில் பெற்றுக் கொள்ளலாம்.

அல்லது https://tnvelaivaaippu.gov.in மற்றும் www.tnvelaivaaippu.gov.in என்ற இணையதளத்தில் விண்ணப்பத்தினை பதிவிறக்கம் செய்துகொள்ளலாம்.

ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் 45 வயதுக்கு மிகாமலும், ஏனையோரை பொறுத்தமட்டில் 40 வயதுக்கு மிகாமலும் இருத்தல் வேண்டும். தற்போது அரசாணைப்படி மனுதாரரின் குடும்ப ஆண்டு வருமானம் ரூ.72,000-க்கு மிகாமல் இருத்தல் வேண்டும்.

31-ந் தேதி கடைசி நாள்

கிராமநிர்வாக அலுவலர் மற்றும் வருவாய் ஆய்வாளர் கையொப்பம் பெற்று பூர்த்தி செய்த விண்ணப்பபடிவத்துடன் தேசியமையமாக்கப்பட்ட வங்கி கணக்கு உள்ள புத்தகம், ஆதார்அட்டை, குடும்ப அட்டை, கல்வி சான்றிதழ்கள், ஜாதிசான்றிதழ், வேலைவாய்ப்பு அடையாள அட்டை ஆகியவற்றின் அசல் மற்றும் நகலுடன் வருகிற 31-ந் தேதிக்குள் திருப்பத்தூர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில் நெறிவழிகாட்டும் மையத்தில் விண்ணப்பத்தினை சமர்ப்பிக்க வேண்டும்.

 OFFICIAL PDF : CLICK HERE

                                                   Join Our Job Talkies Daily Job Updates      

Whatsapp Group Link

Face Book Page Link

Telegram Group Link

Instagram Page Link

JobTalkies You Tube Channel Link

 

No comments:

Post a Comment